முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய கல்விக் கொள்கை: ரமேஷ் பொக்ரியால் ஆலோசைன

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, காணொலி காட்சி வாயிலாக மாநில கல்வித்துறை செயலாளர்களுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மறுநாள் ஆலோசைன மேற்கொள்கிறார்.

அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனையின் போது கொரோனா தொற்றின் தாக்கத்தால், உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை எப்போது நடத்துவது, என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கையை எப்போது முதல் அமல்படுத்துவது என்பது குறித்தும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Advertisement:

Related posts

ரூ.49.50 கோடி கடன் : கமல்ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா?

Karthick

கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

Jeba

குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் எம்.பி!

Niruban Chakkaaravarthi