முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்தனர். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்புப் பட்டை அணிந்து அவர்கள் வந்தனர்.

பேரவைக் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக பேரவை யில் மசோதா கொண்டு வருகிறோம்; இதை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் பதிலளித்தபோது எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் திமுக – அதிமுக எம்.எல்.ஏக்கள் இடையே நீட் விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்குபெறும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி புதிய கட்சி தொடங்க முடிவு!

Niruban Chakkaaravarthi

பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Halley karthi

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்

Gayathri Venkatesan