முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியை உதறுகிறார் விராத் கோலி?

டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் கேப்டன் பதவியில் இருந்து விராத் கோலி  விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி. அனைத்து வடிவிலான போட்டிகளுக் கும் அவரே கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை வகிப்பதால், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும் குறைந்த ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியை துறக்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில், மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாகவும் இருக்கும் ரோகித் சர்மா, புதிய கேப்டனாக பொறுப்பேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு விராத் கோலியே தனது பதவி விலகல் முடிவை அறிவிப்பார் என்றும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராத் கோலி தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் உடற் பயிற்சி வீடியோ இணையத்தில் வைரல்

Vandhana

போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

Vandhana

தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

Gayathri Venkatesan