முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை – மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க திட்டம்

சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு
ரயில்வே திட்டமிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு போடி – தேனி – மதுரை இடையே தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள்
அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் – பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, தேனி – சென்னை இடையேயான புதிய ரயில் சேவையை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

10% இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம்!

Ezhilarasan

அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்

Halley karthi

பெரும்பாலான பெண்கள் Zoom வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பது ஏன்?

Jayapriya