”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – தியாகராய நகர் கள நிலவரம்

சென்னை தியாகராய நகர் பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக மாற்றப்பட்டுள்ள ஒருவழிப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாக பாதசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர்…

சென்னை தியாகராய நகர் பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக மாற்றப்பட்டுள்ள ஒருவழிப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாக பாதசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்துகிறது.

அந்த வகையில் சென்னை தியாகராய நகர் பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியின் காரணமாக போக்குவரத்திற்காக திருப்பிவிடப்பட்டுள்ள ஒரு வழிப்பாதையில் அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – சோழிங்கநல்லூர் முதல் மாதவரம் வரை நடைபெறும் பணிகளால் ஏற்படும் சிரமங்கள்

பாண்டி பஜார் மற்றும் வெங்கட்நாராயணா சாலையை இணைக்கும் ஒரு வழிப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகர் பகுதிகளில் பல இடங்களில் சிக்னல்கள் முறையாக வேலை செய்யாத நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும் பாண்டி பஜார் பகுதியில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதால் அருகில் உள்ள ஒரு வழிப் பாதையில் வாகனங்களை நிறுத்துவதாக பாதசாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.