தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026- தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து. பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதவரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்தது.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், மாநில கஜானாவை திமுக அரசு காலி செய்துள்ளதாகவும் அது பற்றி வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன் படி இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ் நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் படி ,
- மாநிலத்தின் மொத்த நிலுவைக்கடன் 10 இலட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் – 28.3% ஆகும்.
- வருவாய்ப் பற்றாக்குறையானது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 78,324 கோடி ரூபாயாக உச்சம் பெற்றுள்ளது.
- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம்- 5.45% ஆகும்.
- மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆகும்.
- மொத்த வருவாய் வரவுகளில் பொறுப்பேற்ற/தவிர்க்க இயலாத செலவினத்தின் சதவீதம் 64.4% ஆகும்.
- அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கிய உண்மையான கடனளவு 13.18 இலட்சம் கோடி ரூபாய் ஆகும்.




