மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும், புகார் செய்ததும் கைது செய்ய சொல்வது ஏற்புடையதல்ல என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை அடையாறு உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், 9 ஆண்டுகளை வெற்றிகரமாக கடடஙகு 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைகிறோம். இந்த 9 ஆண்டு காலம் எங்களின் நல்லாட்சியை , பாஜக சார்பில் மக்களிடம் எடுத்த சொல்லும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம் இந்தியாவில் எங்கும் நிகழாத ஊழல் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் பாஜக அதனை தற்போது மாற்றியுள்ளது.
ஒடிசாவில் ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பேசும்போது, 100 ரூபாயை அனுப்பினால், அது கடைக்கோடி மாநிலத்தில் இருக்கும் மனிதனிடம் சேரும்போது 85 ரூபாய் காணாமல் போயிருக்கிறது. 15 சதவீதத் தொகை மட்டும்தான் அங்கு சென்று சேர்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு மத்திய அரசு 100 ரூபாய் அனுப்பினால், கிராமங்களில் இருக்கும் கடைக்கோடி மனிதருக்கு அந்தத் தொகை முழுவதுமாக சென்று சேர்கிறது. எந்தவிதமான இடையூறு இல்லாமல் அதை செய்ய முடிகிறது என்றால் அது இந்திய வளர்ச்சிப் பாதையில் ஒரு மிகப்பெரிய மாற்றம்.
குறிப்பாக கொரோனாவை மிகச்சரியாக கையாண்ட நாடு என்றால் அது இந்தியா தான். மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கொரோனா மரணம் அதிகம். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 220 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறி இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவைவிட பலமடங்கு இறப்புகள் பதிவானது.
100 சதவீதம் கிராமத்திற்கு , கழிவறை கட்டி கொடுத்துள்ளது.12 கோடி வீடுகளுக்கு அதாவது 62 சதவீத பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்பட்டுளள்து. கியாஸ் சிலிண்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இலவசமாக 9.6 வீடுகளில் எரிவாயு இணைப்பு வழங்கி உள்ளோம். 4.12 கோடி போலி இணைப்புகளை ரத்து செய்துள்ளோம். விறகு அடுப்பில் சமையல் செய்வது மூலமாக ஏற்படும் நோயில் இருந்து விடுதலை செய்துள்ளோம். 80 கோடி இந்தியர்களுக்கு கொரோனா ஆரம்பத்தில் இருந்து 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை ஆயுஷ் மான் பாரத் மூலம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டு காலமாக யூரியா தட்டுப்பாடு என்று நாம் பார்க்கவில்லை. 2 லட்சம் கோடிக்கு மேல் யூரியாவுக்காக மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
9 ஆண்டில் 74 விமான நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டு , இந்தியாவில் 148 விமான நிலையங்களாக தற்போது உயர்ந்துள்ளன. 53 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் ஒரு நாளைக்கு 40 கி. மீ அளவு புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவில் 4.71 கோடி போலி ரேஷன் கார்டு ரத்து செய்துள்ளோம். உலகத்தில் நடக்க கூடிய டிஜிட்டல் பணமாற்றம் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது, 20 சதவீதம் அமெரிக்காவில் நடக்கிறது. உலகத்தில் மொபைல் தயாரிப்பில் 2 வது இடத்தில் உள்ளது இந்தியா அம்பேத்கரின் நீர் வழிப்பாதை திட்டத்தை காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தவல்லை. தற்போது 111 தடங்களில் சரக்குக் கப்பல் போக்குவரத்து வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் நேற்று புல்லட் ரயில் பயணம் செய்துள்ளார். ஆனால் அதன் பயணச்சீட்டு விலை அதிகம், அதை அவர் சொல்லவில்லை. ஆனால் வந்தே பாரத் மிகச்சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 19 வந்தே பாரத் செயல்பாட்டில் உள்ளது. 2014-ம் ஆண்டு வரை 5 மாநகரத்தில் மெட்ரோ இருந்தது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகால 15 எய்ம்ஸ் மருத்துவமனை அதிகரித்துள்ளது. 700 மருத்துவக்கல்லூரியை கொடுத்துள்ளார். தமிழத்தில் கடந்த ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி மத்திய அரசு வழகியது. அதில் 3 கல்லூரி அங்கீகாரம் ரத்து செல்ல உள்ளதாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை , தாங்கள் குற்றச்சாட்டு கூறியவுடன் , குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை போல் உள்ளது. அவ்வாறு செய்தால் அரசின் சட்டத்திட்டம் கேள்விக்குள்ளாகும். புகாரளிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் விசாரணை நடத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 99 சதவீத வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவவில்லை.
திமுக அரசு மீது நான் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளேன். ஆனால் நான் பெரிய ஆள் என்பதால் அவர்கள் மீது புகார் கூறியவுடனேயே கைது செய்ய வேண்டும் என்று நான் கூறினால் அது சரியாக இருக்காது.. மல்யுத்த வீராங்கனைகள் 7 நிபந்தனைகளை சொல்லியுள்ளனர். அதில் 2 வது நிபந்தனையே குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவதாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளை யாரும் மரியாதை செய்யாத போது , அவர்களை அழைத்து பாராட்டியவர் பிரதமர் மோடி. மல்யுத்த வீராங்கனைகள் தங்களது குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா











