ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு

ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…

ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் கெளரி ரமேஷ், மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்வார் என சட்டக்கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசாருக்கும், கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் சொக்கலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் தனது கண்டங்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக, ராகிங் கொடுமையால் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி கவிப்பிரியாஉயிரை மாய்த்துக் கொண்டதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்டிருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி, உண்மைகளை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.