கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு

கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர்…

கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின்
தலைமை அலுவலகத்தில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர் தெரிவித்ததாவது..

12 மணி நேர வேலை நேர சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெறுவதை வரவேற்கிறோம். கடலுக்குள் பேனா வைப்பது பகுத்தறிவா..?  அம்பேத்கரின்  பேனாவை விட இது பெரிய பேனாவா..? ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு பணம் கொடுக்க காசு இல்லை. இதற்கு மட்டும்  நிதி எங்கு இருந்து வந்தது.

பேனா வைக்கக்கூடிய இடம் கடல் இல்லை. கடற்கரையை தங்களது சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது. போராடக்கூடிய இடம் கடற்கரை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி நிலையில் புதைப்பதற்கு மட்டும்  நீதிமன்றம் அனுமதி வழங்கியது எப்படி.? கடலை கடலாக வைத்திருங்கள்.

தொலைபேசியில் யார் பேசினாலும் பதிவு செய்து விடுகிறார்கள். உளவு துறை அவர்கள் கையில் இருப்பதால் இதுபோல தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.

தானியங்கி எந்திரம் மூலம் மதுபானம் வழங்குவது திராவிட மாடலில் வருகிறதா.. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஆட்களுக்கு
பாதுகாப்பாக இருக்கிறார்கள்.” என சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.