13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி…

மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சாந்தி அவரை பிரிந்து சென்றபின் கெளசல்யா என்ற பெண்ணோடு வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் கெளசல்யாவின் சகோதரியான சுந்தரிக்கு சதீஷ் என்பருடன் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருந்தது. சதீஷ் கடந்த ஆண்டு 2008 அன்று உயிரிழப்பு செய்து கொண்டு உயிரிழந்தார். இதனால் சுந்தரி தன் குழந்தையுடன் சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அப்போது சுந்தரிக்கு முருகேசனுடன் தொடர்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த தீபாவளியின் போது வீட்டில் யாரும் இல்லாத சூழலில் சுந்தரியின் 13 வயது மகளை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுமி நடந்த சம்பவத்தை பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்த பயத்தை பயன்படுத்தி பலமுறை அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார் முருகேசன்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு சுந்தரி விசாரித்தார். பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி சொன்னதை கேட்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சுந்தரி பெருந்துரை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெருந்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது வெகுஜன மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply