அதிவேகமாக 1000 ரன்கள், அதிக சிக்சர்கள் : உலகக்கோப்பையில் சாதனைகளை குவிக்கும் ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் 9வது லீக்…

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை சென்னை சேப்பக்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.   

இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்திய – ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இந்தியாவிற்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  இன்றைய போட்டியில் 272 ரன்கள் குவித்ததன் மூலமாக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

https://twitter.com/BCCI/status/1712097095468060860?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712097095468060860%7Ctwgr%5E6dd6bf82a80fc54bf06b447de9ee1f6aea029d4b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FBCCI%2Fstatus%2F1712097095468060860%3Fref_src%3Dtwsrc5Etfw

உலகக் கோப்பையை தொடக்கும் போது 17 இன்னிங்ஸ்களில் 978 ரன்கள் உடன் தொடங்கினார். இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார். இவர் இன்று 17 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 1000 ரன்களை கடந்தார். இதன் மூலமாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.