100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மணப்பாறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வஞ்சக செயலை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.டி.சண்முகநாதன்,ஒன்றிய தலைவர் எம்.ராமசாமி,இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய துணை செயலாளர்கள் ஸ்டீபன்சேகர்,தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து மத்திய அரசிற்கு எதிராக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
—வேந்தன்







