தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!

மன்னார்குடியில் நடைபெற்ற, கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டியில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்த கோப்பை வென்றனர். தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டிகள் மன்னார்குடியில் உள்ள பான்…

மன்னார்குடியில் நடைபெற்ற, கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டியில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்த கோப்பை வென்றனர்.

தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டிகள் மன்னார்குடியில் உள்ள பான்
செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நடை பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் விக்டோரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணிதம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடை பெற்றது.

இதில், மன்னார்குடி தஞ்சாவூர் உள்ளிட்ட 7 கல்லூரி களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இணைப்புக் கணிதம், கணித அடிப்படையில் ஓவியம் வரைதல், கணித வினாடி வினா என பத்து வகையான கணிதம் சார்ந்த போட்டி கள் நடத்தப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்து போட்டியிலும் சிறந்து விளையாடி தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள், ஒட்டு மொத்த கோப்பையை வென்றனர். இந்த நிகழ்ச்சியில் கணிதத் துறை
பேராசிரியர் கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

—ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.