தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர்…

தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் ஏராளமான விவசாய நிலங்கள் தற்போது 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீரின்றி, வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் வறண்டு கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் நெல் நாற்றுகளை ஆடு, மாடுகளாவது மேயட்டும் என்ற எண்ணத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து தேமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.