நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை!

நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில்…

நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துாத்துக்குடி மாவட்டத்தில் அதிக வருவாய் கொண்ட ரயில் நிலையமாக கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளது. இதனால் தற்போது இயக்கப்பட உள்ள ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வியாபாரிகள், வர்த்தக சங்கங்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.