கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000…

ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வாய்க்கால் நீர் போக, உரம்பு நீர் பாசனம் மூலம் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில், 124 மையில்  நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில்  கான்கிரீட் தளம் அமைக்க அரசு முடிவு செய்ததுள்ளது. இத்திட்டத்திற்கு  விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விவசாயிகளின்  கடுமையான  எதிர்ப்பால் கான்கிரீட் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இத்திட்டத்தை  தற்போதைய திமுக அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.