அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அபுதாபியில் புதிய வகை MERS கொரானோ வைரஸால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில்…

அபுதாபியில் புதிய வகை MERS கொரானோ வைரஸால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இளைஞரிடம் தொடர்பில் இருந்த  108 பேரை பரிசோதனை செய்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்பில் இருந்த யாருக்கும் நோய்த் தொற்று பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் ட்ரோமடரி ஒட்டகங்களிலிருந்து பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் ட்ரோமடரி ஒட்டகங்களுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை எனவும் எப்படி பரவியது எனவும் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

MERS – என்கிற புதிய வைரஸ் எப்போது பரவியது..?

Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) முதன்முதலில் 2012ம் ஆண்டு சவூதி அரேபியாவில் தான் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த வைரஸ் கிட்டதட்ட 27 நாடுகளில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2605 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவற்றில் 938பேர் மரணித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.