கன்னியாகுமரியில் திடீர் கன மழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் கன மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள்…

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின்
தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் கன மழை காரணமாக
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறு, குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் பெருமளவில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மார்த்தாண்டம், திருவட்டார், ஆற்றூர் குட்டை குழி, நாகர்கோவில் என மாவட்டத்தில்
பல பகுதிகளில் கன மழை பெய்தது.

தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரமாக பெய்த மழையால்,  கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.