திருச்செந்தூரில் பைப் உடைந்து சாலையில் வீணாக ஓடிய குடிநீர்!

திருச்செந்தூரில் குடிநீர் பைப் உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்ற சம்பவம் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகளும், சுமார் 40 ஆயிரம்…

திருச்செந்தூரில் குடிநீர் பைப் உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்ற சம்பவம் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகளும், சுமார்
40 ஆயிரம் பேரும் வசித்து வருகின்றனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட தனியார்
விடுதிகளும் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர்
நகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நகர்
பகுதியில் உள்ள மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்
வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம்
செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் குரங்கணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம்
திருச்செந்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், திருச்செந்தூர் திருநெல்வேலி சாலை மற்றும் தூத்துக்குடி சாலையில்
வீணாக குடிநீர் சென்றது.

மேலும், தாழ்வான பகுதிகளில் இந்த குடிநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து.
இந்த குடிநீர் குழாய் உடைப்ப சரி செய்ய நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்ததால்,
பல மணி நேரம் குடிநீர் வீணாக சாலையில் சென்றது. இதனால் பல லட்சம் லிட்டர்
குடிநீர் வீணானது. சாலையில் குடிநீர் வீணாக சென்றது பொது மக்களிடையே
வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.