கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தியாகும் வெள்ளரிக்காய், கத்தரிக்காய், தக்காளி, பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி  வெள்ளரிக்காய் தற்போது சந்தைக்கு குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையான வெள்ளரிக்காய் தற்போது 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து குறைவு காரணமாக திடீர் விலையேற்றம் தொடர்ந்து விவசாயிகள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.