தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதனை முன்னிட்டு 5 மாநிலங்களுக்கும், தேர்தல் கமிஷனர் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு அனைத்து ஆய்வுகளும் முடிந்த நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் மதிப்பாய்வு நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கான தேதிகளையும், வேட்புமனு தாக்கல் போன்ற தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகளையும் தேர்தல் கமிஷனர்கள் தேர்வு செய்து வைத்து விட்டனர். தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகளுக்காக நேற்று தேர்தல் கமிஷனில் ஆலோசனையும் நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.