கூடலுாரில் துவங்கிய பட்டர் ஃப்ரூட் சீசன் – கிலோ ரூ.140-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கூடலுாரில் பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியது. ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் பட்டர்ஃப்ரூட் பழங்கள் நீலகிரி மாவட்டம், கூடலுாரில்  அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.…

கூடலுாரில் பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியது. ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் பட்டர்ஃப்ரூட் பழங்கள் நீலகிரி மாவட்டம், கூடலுாரில்  அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அப் பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பழங்கள் போக மீதமுள்ள பழங்களை விற்பனை செய்கின்றனர். தற்போது பட்டர் ஃப்ரூட் சீசன் துவங்கியுள்ளதால் இந்தாண்டு பழவிளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த பழம் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பழத்தை உற்பத்தி செய்யும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் என பல பகுதிகளிலுள்ள வியாபாரிகள் அதிக அளவு வந்து கூடலுார் பகுதியில் பட்டர்ஃப்ரூட் பழங்களை விற்பனைக்காக வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 800 டன் பட்டர் ஃப்ரூட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.