முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!


மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 2 வருட தளர்வு வழங்க கோரி திருச்சியை சேர்ந்த அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு ஆகியவை மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதே சமயம் நீதிபதிகள், “தேசிய வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை செலுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.

Advertisement:

Related posts

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

Nandhakumar

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் முதல்வர் ஆய்வு!

Karthick

காட்டு யானையை விரட்ட வந்த கும்கியுடன் செல்ஃபி எடுத்து வரும் பொது மக்கள்!

Jayapriya