முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மே 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வரும் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகளை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று திமுக போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன என்று குறிப்பிட்ட எல்.முருகன், தொற்று குறைந்து வருகிறது என்பதால் பல மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா நேரத்தில் மிக அத்தியாவசியமில்லாத இந்த கடைகள் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்றதோடு, மதுக்கடைகள் திறப்பதற்கு அனைத்து தாய்குலங்களும் எதிர்ப்பு என்ற நிதர்சனமான உண்மையை தமிழக முதல்வர் உணரவேண்டும் தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் எல்.முருகன்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா: 486 பேர் உயிரிழப்பு!

Karthick

போலி இன்சூரன்ஸ் நிறுவனம்…. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Jeba

10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!