Skip to content
August 14, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » actor charlie complaint to commissioner office fake twitter account
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்!

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார். நடிகர் சார்லி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும்…

Author Avatar

EZHILARASAN D

June 11, 20215:15 pm actor charliecomplaintfake twitter account

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

நடிகர் சார்லி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் அதனை சார்லியின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று நினைத்து பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று வந்த சார்லி, தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சார்லி, “என்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. எந்த சமூக வலைதளத்திலும் எனக்கு கணக்கு இல்லை. ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அவசியம் இதுவரை எனக்கு வரவில்லை” என்றார். மேலும், “எனது பெயரில் போலியான கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் உணர்ந்து அந்த கணக்கை பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

“பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

By Web Editor August 14, 2026

GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

By Web Editor August 14, 2026

“முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன்?” – டி.ஆர்.பி ராஜா

By Web Editor August 13, 2026

இரவு 10 மணிவரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor August 13, 2026
#ट्रेंडिंग हैशटैग:actor charliecomplaintfake twitter account

Post navigation

Previous Previous post: விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
Next Next post: 10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading