அமெரிக்கா உணவு தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஃப்ளேவர் கொண்ட ஐஸ்கிரீம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஐஸ்கிரீம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருள். ஐஸ்கிரீமில் பல ஃப்ளேவர்கள் இருப்பதால், ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பக்கூடிய சுவையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதில் கிடைக்கிறது. வெண்ணிலா, சாக்லேட், ஸ்டிராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச், பிஸ்தா, மேங்கோ, என இதன் ஃப்ளேவர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் 10 மிகவும் மாசுபட்ட நகரங்கள்
இதேபோல் புதிய ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மோமோஸ், தோசை போன்ற விநோதமான ஃப்ளேவர்களும் ஐஸ்கிரீமில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய விநோதமான ஃப்ளேவர்களின் வரிசையில் தற்போது பண்ணை ஃப்ளேவரும் இணைந்துள்ளது.
பண்ணை ஃப்ளேவரா? அது என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். பண்ணை ஃப்ளேவர் என்றால் மோர், பூண்டு, மயோனீஸ், உப்பு, கருமிளகு, வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றின் சுவைகளை ஒருங்கே கொண்டிருக்கும். இவ்வாறான புதிய ஃப்ளேவரை, தேசிய பண்ணை தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் ’ஹிட்டன் வேலி ரான்ச்’ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.







