நுகர்வோருக்கு ஜிஎஸ்டி பதிவு எண் குறிப்பிடாமல் பில் வழங்கிய ஸ்வீட் ஸ்டாலுக்கு 7 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மேட்டு தெருவைச் சார்ந்த அப்துல் சுக்குர் ரஹ்மானி என்பவர் பாளையங்கோட்டை ஸ்ரீ ராம் லாலா ஸ்வீட்ஸ் ஸ்டாலில் 200 ரூபாய் கொடுத்து மிச்சர் அல்வா சேவ் வாங்கியுள்ளார். மனுதாரருக்கு கொடுத்த பில்லில் ஜிஎஸ்டி விதிகளின்படி ஜிஎஸ்டி பதிவு எண் குறிப்பிடவில்லை. தொடர் வரிசை எண் பில்லில் குறிப்பிடவில்லை. மேலும் ஸ்வீட் ஸ்டால் பெயர் பலகையில் ஜிஎஸ்டி எண் எழுதப்படவில்லை.மனுதாரிடம் 5% ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜிஎஸ்டி என்ற பெயரில் 10 ரூபாய் சேர்த்து அப்துல் சுக்குர் ரஹ்மானியிடம் வசூல் செய்துள்ளனர். சுக்குர் ரஹ்மான் 10 ரூபாயை திரும்ப கேட்டும் கேட்டும் ஸ்ரீ ராம்லாலா ஸ்வீட் ஸ்டால் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மனுதாரருக்கு அரைகுறையான பில் வழங்கியது சேவை குறைபாடு என்றும் மனுதாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 7,000 வழங்குமாறு ஸ்வீட் ஸ்டாலுக்கு உத்தரவிட்டார்.