முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் : 5வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பையில் நடைபெற்று வரும்  மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்ற நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின்
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் சீவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள் : பண்ணை ஃப்ளேவர் ஐஸ்கிரீம் – இது புதுசா இருக்குண்ணே!!

பின்னர் விளையாடிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை
எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்

Web Editor

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்

Web Editor

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

EZHILARASAN D