முக்கியச் செய்திகள் சினிமா

தரமான படத்தை தாங்கிப் பிடிக்க ரசிகர்கள் தவறியதே இல்லை-நடிகர் கமல்ஹாசன்

விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்து வெற்றி பெறச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தரமான தமிழ் படத்தையும், திறமையான நடிகர்களையும்  தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். இசை அமைப்பாளர் அனிருத், சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவு என தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது தான் நியாயம்.

விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கடைசி மூன்று நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீதும், என் மீதும் உள்ள அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது என்று அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தை மாஸ்டர், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்துக்கு அனிருத் இசை அமைத்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

EZHILARASAN D

தெலுங்கானாவில் 2 வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்

G SaravanaKumar

பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

G SaravanaKumar