இந்து முறைப்படி தான் தனது திருமணம் நடைபெறும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய சந்திப்பு
நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசுகையில், இயக்குனர், தயாரிப்பாளர்,
பாடலாசிரியர் என பல பரிணாமங்களின்போது தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும்
நன்றி. அதேபோல, தன்னுடைய அடுத்தகட்ட வாழ்க்கை நிகழ்வை நோக்கி
நகர்கிறேன். வரும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுடன்
திருமணம் செய்ய உள்ளேன்.
திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. சில சிக்கல் காரணமாக மாமல்லபுரத்தில் குறிப்பிட்ட சில பேர் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் முடிந்த பிறகு ஜூன் 11 ஆம் தேதி தானும் நயன்தாராவும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறோம். இந்து முறைப்படிதான் திருமணம் நடைபெறும் என்றார்.
-ம.பவித்ரா








