கேரளத்தில் விக்ரம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வரை ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகமான வசூலைக் குவித்து வருகிறது விக்ரம் திரைப்படம்.
கமல் நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் சேர்த்து ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்திலும் விக்ரம் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. முதல் நாளில் ரூ. 5.02 கோடியும், சனிக்கிழமை ரூ. 5.05 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 5.65 கோடியும் என கேரளத்தில் மட்டும் ரூ. 15.75 கோடியை வசூலித்துள்ளது. கேரளத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ள தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஷிபு தமீன்ஸ் இத்தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், முதல் நாளைவிட 2வது நாளில் அதிக வசூலைப் பெற்ற படத்தை நான் பார்த்ததில்லை என அவர் கூறியுள்ளார். அடுத்த சில வாரங்களில் மிக அதிமான வசூலை விக்ரம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா








