மதுரை மாவட்ட ஜெயம் ரவி ரசிகர் மன்றத் தலைவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்குத்
திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராகவும், ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது தொழில் காரணமாக லாரியில் சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், புதிய திரைப்பட படப்படிப்பில் இருந்த நடிகர் ஜெயம் ரவி தனது
ரசிகரின் மறைவு குறித்து செய்தியறிந்ததையடுத்து, நேற்று மாலை மதுரை நிலையூர் பகுதியில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்றார். செந்திலின் மனைவி
மற்றும் இரு குழந்தைகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், செந்திலின் குடும்பத்தின் நலனுக்காக 5 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், செந்திலின் இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது மாநில நிர்வாகிகள் ஷாம் சாக், செயலாளர் கார்மேகம், மாநில
பொறுப்பாளர் தவசி ஆகியோர் உடனிருந்தனர்.
-ம.பவித்ரா