முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

சாலையில் விழுந்த மரங்கள்; களத்தில் இறங்கிய காவல் துறை

மாண்டஸ் புயல் காரணமாக அடையாறு ஆற்று பாதையில் முறிந்து விழுந்த மரங்களை விடிய விடிய அகற்றிய காவல்துறையினர்.

மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் புயல்
காற்று வீசி வந்தது.  இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர், நடுவீரபட்டு,
கரசங்கால், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மரங்கள் முறிந்து
அடையாறு ஆற்றுக்கு செல்லும் ஆற்றுப்பாதையில் விழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதனை அறிந்த மணிமங்கலம் சரக காவல் உதவி ஆணையர் ரவி தலைமையில் மணிமங்கலம் மற்றும் சோமங்கலம் போலிசார் மணிமங்கலம் காவலர்கள் மின் கம்பிகளுக்கு அருகே செல்லும் மரக்கிளைகள் அகற்றினர். மேலும், அடையாறு ஆற்றுப் பாதையில் முறிந்து விழுந்த 100 க்கும் மேற்பட்ட மரங்களை அறுவை இயந்திரங்கள் கொண்டு விடிய விடிய அறுத்து அப்புறபடுத்தினர்.


இதனால் அடையாறு ஆற்றுப்பாதையில் தொய்வின்றி மழைநீரானது அடையாற்றுக்கு
சென்றடைந்தது. மேலும் பேரிடர் காலங்களில் காவல்துறையினர் பொதுவாக வருவாய்
துறையினர் பொதுப் பணித்துறையினருக்கு மற்றும் பொதுமக்கள் உறுதுணையாக
பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மணிமங்கலம் காவலர்கள்
நேரடியாக களத்தில் இறங்கி மரங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டது அப்பகுதி
பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

Tokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனை

Jeba Arul Robinson

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Arivazhagan Chinnasamy

சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

Vandhana