காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்

தமிழ் நாட்டின் முதலமைச்சரராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் மாநிலத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயுஎம்எல் கட்சி தலைவர் காதர் மொகிதீன், தி.க. தலைவர் கீ. வீரமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.