முக்கியச் செய்திகள்இந்தியாகுற்றம்ஹெல்த்

ரூ.16 லட்சம் கொடுத்தவருக்கு மருத்துவருக்கான போலி சான்றிதழ் கொடுத்த உத்தரப்பிரதேச பல்கலை.! 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவர் என போலீ சான்றிதழை வழங்கிய நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று பணத்தைப் பெற்றுக்கொண்டு ஹோமியோபதி மருத்துவர் என போலியான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிlஇல் போலி சான்றிதழ் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது 5 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீட் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை நிரப்புவதில் பல்வேறு குளறுபடிகளும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளும் நீடித்து வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.16.32 லட்சம் பெற்றுக்கொண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள புந்தேல்கண்ட் பல்கலைக்கழகம் போலி மருத்துவ சான்றிதழை வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை செலுத்திய ஒரு மாதத்தில் வகுப்புகளுக்குச் செல்லாமல், எந்தவொரு தேர்வும் எழுதாமல், பயிற்சி இல்லாமல் மருத்துவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சுரேஷ் பாட்டீல் (41) என்பவர், மருத்துவம் சார்ந்த உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அகில இந்திய மாற்று மருத்துவ கவுன்சில் சார்பாக MBBS படிப்புகளுக்கான சான்றிதழ் வழங்குவது தெரியவந்துள்ளது. இது குறித்து அதில் வழங்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் மருத்துவர் பிரேம்குமார் ராஜ்புத் என்பவரையும் தொடர்பு கொண்டுள்ளார்.

அதில் அவர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் MBBS  முடித்த சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் முறைப்படியே நடத்தப்படுவதாக உறுதி அளித்து பாட்டீலை நம்பவைத்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து ஆரம்பகட்டமாக ரூ.50,000 செலுத்தியுள்ளார். அதன் பிறகே ஜான்ஸியிலுள்ள புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் – 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

இது குறித்து பேசிய சுரேஷ் பாட்டீல், ”ராஜ்புத் 25 முறைக்கும் மேலாக இதைக் கூறியிருப்பார். மருத்துவர் செளகத் கான், மருத்துவர் ஆனந்த் குமார் மற்றும் அருண் குமார் ஆகிய மூவரும் MBBS முடிக்க உதவுவார்கள். அவர் அறிவுறுத்தலின்படி கடந்த ஜூலை 10, 2018 முதல் பிப்ரவரி 28, 2019 வரை ரூ.16.32 லட்சம் செலுத்தினேன்.

கடந்த 2019 மார்ச் மாதத்தில் MBBS மதிப்பெண் சான்றிதழ், மருத்துவர் பட்டம், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் அடங்கிய கொரியர் வந்தது. சான்றிதழ்களில் என் பெயரும் இந்திய மருத்துவ கவுன்சிலின் முத்திரையும் அதில் இருந்தது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய மருத்து கவுன்சிலை பாட்டீல் அணுகியுள்ளார். பின்னர் 2019ம் ஆண்டு அகமதாபாத் குற்றப்பிரிவுக்கு இந்த விவகாரம் கைமாறியது. 2019ஆம் ஆண்டு மேக்சனா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். MBBS முடிக்க உதவுவதாகக் கூறிய மருத்துவர் ஆனந்த் குமார் என்பவரின் முகவரிக்கு சென்றும், ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சியது.

பின்னர் டெல்லியிலுள்ள தனியார் வங்கி கிளைக்குச் சென்று விசாரித்தபோது, இது போன்று பலர் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணையில் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத நிலை நீடித்தது. இது தொடர்பான ஆதாரங்களைத் தேடிய பாட்டீலின் தொடர் முயற்சியால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேக்சனா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 2023-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

Arivazhagan Chinnasamy

ரியல்மீ நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாருக்கான்!

Web Editor

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை தொடக்கம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading