பாரிஸ் ஒலிம்பிக் | தமிழ்நாட்டை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு பாரீஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற…

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு பாரீஸ் விளையாட்டு போட்டிகள் வருகின்ற ஜுலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று வெளியிட்டது.

இதில், ஷாட் கன் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளனர். பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பிருத்விராஜ் தொண்டைமான் கூறியதாவது;

“இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. கடந்த முறை நூலிழையில் வாய்ப்பிழந்த நிலையில், தற்போது தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.