சுகாதாரத்துறையில் மிகவும் மோசமான மாநிலங்களில் பட்டியில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல சிறந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பானது 2019-2020 ஆண்டுக்கான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பட்டியலில் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
அதே போல கேரளம் இத்துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியில் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதாக முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசத்தையடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மாற்றங்களை பதிவு செய்துள்ளன. சிறிய மாநிலங்களை பொறுத்த அளவில், மிசோரம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி வருவதாக நிதி ஆயோக்கின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யூனியன் பிரதேசங்களை பொறுத்த அளவில், டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்திய பட்டியலில் பின்தங்கியுள்ளன.
கேரளாவை பொறுத்த அளவில், மருத்துவம் மட்டுமல்லாது இதர அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடும் சிறப்பாக பணியாற்றி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலின் வரிசையில் மூன்றாவது இடத்தில் தெலங்கானா பிடித்துள்ளது. சிறிய மாநிலங்களின் பட்டியலில் மிசோரத்தை தொடர்ந்து, திரிபுரா சிறப்பான மாற்றங்களை பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை நடைபெற உள்ள நிலையில், நிதி ஆயோக் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








