பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்த
போலி மருத்துவர் கைது செய்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள்
மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சாந்திக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்துகள்
ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையிலான குழுவினர் எலங்காளப்பட்டி கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வெள்ளி சந்தை பகுதியை சேர்ந்த முருகேசன் (48). இவர் 10ம் வகுப்பு மட்டுமே
படித்து விட்டு சில ஆண்டுகளாக எலங்காளப்பட்டி கிராமத்தில் மெடிக்கல் ஸ்டோர்
நடத்தி கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததுள்ளார். மேலும், மருந்தகத்தில் அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளை அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து முருகேசனை கைது செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்திய குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்







