எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டர்

தன்னிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை கடத்தல் வழக்கில் சிக்க வைக்க, தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்…

தன்னிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை கடத்தல் வழக்கில் சிக்க வைக்க, தன்னைத் தானே கடத்தி நாடகமாடிய போலி ஆடிட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை வடபழனி பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜா (49). கடந்த 6 ஆம் தேதி இரவு எழும்பூரில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்றார். அங்கிருந்தவர்களுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதால், அவர்கள் ராஜாவை கடத்தினர். இதைக் கண்ட ராஜாவின் டிரைவர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார், ராஜாவின் செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அவர் செல்போன் ஆன் ஆனது. இந்த நேரத்தில் எழும்பூர் போலீசார் அவருக்கு கால் செய்து கடத்திய நபர்களிடம் பேசி, எழும்பூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். விசாரணையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஆடிட்டர் ராஜா, அவர்களிடம் ரூ.80 லட்சம் வாங்கியதாகவும் ஏமாற்றியதால், ராஜாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக, விருதாச்சலத்தை சேர்ந்த குமார் (46), விழுப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டியைச் சேர்ந்த கிள்ளிவளவன் (31), கடலூரைச் சேர்ந்த சுதர்சன்(35), சிதம்பரத்தை சேர்ந்த சிவபாலன் (43), திருவண்ணாமலையை சேர்ந்த ராமமூர்த்தி(51) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் ராஜாவிடம் விசாரித்தபோது, அவர் மோசடி வழக்குகளில் கைதாகி ஏற்கனவே சிறையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்தபோது, அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். அதற்காக, அவர்களை வழக்கு ஒன்றில் சிக்கவைக்க ராஜா திட்டமிட்டார். இதற்காக விடுதியில் அறை எடுத்து, அவர்களை வரவழைத்து, வேண்டுமென்றே தகராறு செய்துள்ளார்.

இதனால், அவர்கள் தன்னை கடத்திச் செல்வார்கள் என்று யூகித்தார். அதன்படியே கடத்தியுள்ளனர். ராஜாவின் டிரைவரிடம் இப்படி நடந்தால், போலீசில் புகார் கொடுக்கச் சொல்லியிருந்தார். அதன்படியே அவரும் செய்துள்ளார். பிறகு தப்பிவிடலாம் என்று ராஜா நினைத்தார். ஆனால், விதி யாரை விட்டது. சிக்கிக்கொண்டார் ராஜா. அவர் மீது
பல மோசடி வழக்குகள் இருப்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.