முக்கியச் செய்திகள் தமிழகம்

மநீம முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்

மகக்ள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஆர். மகேந்திரன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக மருத்துவர் ஆர். மகேந்திரன் நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 2021ம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் மநீவில் இருந்து பணியாற்றினார். இவருடைய அறிவுரையின் படியே கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரனும் கணிசமாக வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர், கமல்ஹாசன் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி மநீம துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார். மேலும் அவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்., பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரின் முன்னிலையில் 78 மநீமவின் முன்னாள் நிர்வாகிகளோடு திமுகவில் இணைந்தார். இவர்களோடு மநீமவின் சுற்றுசூழல் அணியின் முன்னாள் மாநில செயலாளரும், மதுரவாயல் தொகுதியில் மநீம சார்பில் போட்டியிட்ட பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த முன்னாள் மநீம வேட்பாளர் பத்ம பிரியா

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இந்த நிகழ்வு நடந்திருந்தால் கோவை மாவட்டத்திலும் திமுக குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றிருக்கலாம் என தெரிவித்தார். அது நடைபெறவில்லை என்றாலும், இனிமேல் பணிகளை சிறப்பாக செய்து மேற்கு மண்டலத்திலும் திமுகவை பலப்படுத்தலாம் என கூறினார்.

திமுகவில் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 78 பேர் மட்டுமே நேரில் வந்து கட்சியில் இணையவுள்ளதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் இணையவுள்ள 13000க்கும் மேற்பட்டோரின் முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக, தேமுதிக மநீம என பல்வேறு கட்சிகளிலிருந்து தொண்டர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

பெரும்பாலான பெண்கள் Zoom வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பது ஏன்?

Jayapriya

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!

Saravana

கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!

Jeba Arul Robinson