உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளைஞரை காப்பாற்ற உதவிய பேஸ்புக்!

மும்பையில் மன அழுத்தம் காரணமாகஉயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் அளித்த தகவலால் காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 23 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாக மன…

மும்பையில் மன அழுத்தம் காரணமாகஉயிரை மாய்த்துக்
கொள்ள முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் அளித்த தகவலால் காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 23 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த அந்த இளைஞர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து உயிருக்கு  முயன்றார். அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சியை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.

இதனை கண்ட அயர்லாந்தில் உள்ள பேஸ்புக் தலைமை அலுவலகம் இது தொடர்பான தகவலை உடனடியாக மும்பை சைபர் பிரிவு காவல்துறைக்கு அனுப்பினர். இதனை அடுத்து சைபர் பிரிவு காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மும்பை மாநகர காவல்துறையினர் தக்க சமயத்தில் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேஸ்புக் மற்றும் காவல்துறையினரின் இந்த துரித முயற்சியால் தற்போது அந்த இளைஞர் உயிர்தப்பியுள்ளார். மேலும் அந்த இளைஞருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply