அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் உள்ளவர்களை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வைத்து வேலை வாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறினார். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத அளவிற்கு இளைஞர் பட்டாளம் அதிகம் நிறைந்த கட்சி அதிமுக எனக் கூறினார். இளைஞர்களை காணும்போது அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் உள்ளவர்களை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வைத்து வேலை வாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதையடுத்து ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் உள்ளனர்’ எனக் கூறினார்.
Advertisement: