முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எந்த பயமும், தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்- மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு எந்த பயமும் வேண்டாம். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை கவலையில் இருக்கீற்களா? ஒரு கவலையும் வேண்டாம். எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவு தான். அப்படித்தான் இந்த தேர்வை நீங்கள் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா? நாளை பரபரப்பான இறுதி ஆட்டம்!

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்துவீட்டீர்கள் என்று அர்த்தம். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது. அதனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆரிசியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்- ஓ.பன்னீர்செல்வம்

Jayasheeba

கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்க எடுக்க கோரிக்கை

Halley Karthik

குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

Niruban Chakkaaravarthi