நியூஸ்7 தமிழ் மற்றும் வராண்டா ஐஏஎஸ் இணைந்து நடத்தும் “உயரம் தொடு” ஐஏஎஸ்
பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில்
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் வராண்டா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும்
உயர்ந்துடு ஐஏஎஸ் பயிற்சி நிறைவு தேர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்
மற்றும் நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட
மாணவர்கள் பங்கேற்றனர். உயரம் தொடு நிகழ்வில் அறிவிச்சுடர் ஜோதியினை காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஐபிஎஸ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மேடையில் பேசிய மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்ததாவது..
ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு எந்த
உறவினர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் கவனம்
செலுத்தாமல் ஒற்றை குறிக்கோளுடன் படித்தால் வெற்றி பெறலாம். சிறுவயதில் இருந்து ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் தற்போது இருந்தே
செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஐபிஎஸ் மாணவர்களின்
கேள்விக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து பெசிய பேராசிரியர் சண்முக திருக்குமரன் மாணவர்களை IAS தேர்வில் வெற்றி பெறுவது குறித்து ஊக்குவித்தார்.
நியூஸ்7 தமிழ் மற்றும் வராண்டா ஐஏஎஸ் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த மாணவர்களுக்கு வராண்டா ஐஏஎஸ் அகாடமி சார்பாக தேர்வு நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
– யாழன்







