முக்கியச் செய்திகள்

ட்விட்டரில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

தி லெஜண்ட் படத்தில் நடிக்கும் லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது படத்தின் டிரெய்லரை பதிவு செய்தார்.

லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சகமர்சியல் மாஸ் படமாக உருவாகியுள்ளது. பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். சின்னத் திரைக் கலைவாணர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

 

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். இணைந்ததும் முதல் பதிவாக தனது படத்தின் டிரெய்லரைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், சமூக வலைதள உலகில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதேநேரத்தில், எனது படத்தின் டிரெய்லரை வெளியிடுவதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓ மணப்பெண்ணே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

G SaravanaKumar

`திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

Web Editor

ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?

Vandhana