குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!

குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,  நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.  இதனிடையே…

குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,  நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.  இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் நேற்று முன்தினம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இன்று காலை முதல் குற்றாலம் பேரருவி,  ஐந்தருவி,  பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்து சீராக கொட்டுகிறது.  இருப்பினும், தென்காசி மாவட்டத்திற்கு நேற்றும் இன்றும் அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே நேற்று எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இன்றும் மழை இல்லாமல் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : 5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! 

இதன் காரணமாக குற்றால அருவிகளில் இன்று 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை நீடிக்கிறது. அதனுடன் பேரருவி தடாகத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி  தீயணைப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.