முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் சேலையூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இமானு வேல் சேகரனாரின் 65-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில், அவரது உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திராவிட மாடம் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம், என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்தபிறகே திரவிடத்தை அதிகமாக பேசுகின்றனர் என்றார். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்.
அண்மைச் செய்தி : போதை பழக்கம் மிக பெரிய பிரச்சனை – நடிகர் கார்த்தி வேதனை
ராகுல் காந்தியின் நடைபயணம் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ராகுல்காந்தி அரசியல் செய்கின்றாரா என கேள்வி எழுப்பினார் சீமான். ராகுல்காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சிசெய்து கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல்காந்தி நடைபயணம் செய்து மாற்றிவிடுவாரா என்றும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, திமுக, பாஜக இருவருக்கும் வேலை இல்லை. அடிக்கடி இது போன்று வேடிக்கை காட்டுவார்கள் நமக்கு நிறைய வேலை இருக்கு, அவர்களை பற்றி பேசவேண்டாம் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்








