பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது.
வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர் தனது வீட்டில் மாவு அரைக்கும் இயந்திரம் வைத்து சுய தொழில் செய்து வருகிறார். இதில் மாவு அரைக்கும் தொழிலுக்கு உதவியாக எதிர் வீட்டில் உள்ள பள்ளி மாணவியை பணிக்கு வைத்துள்ளார். இதில் பள்ளி மாணவியிடம் சில ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி பயிலும் பள்ளியின் அருகில் இவர் சென்றிருந்தார். அப்போது மாணவியை பள்ளிக்கு செல்லவிடாமல் அழைத்துள்ளார். இதில் சேகர் பேச்சை கேட்டு அவருடன் அந்த மாணவி சென்றிருக்கிறார். இந்நிலையில், மாணவியை கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, இதை யாரிடமும் சொல்ல கூடாது என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் அந்த மாணவி தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதை பற்றி பல முறை பெற்றோரிடம் கூறியும் அதை பொருட்படுத்தாத நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை செய்திருக்கின்றனர். இந்த பரிசோதனையில், மாணவி 7 மாதம் கர்பமாக உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, இது குறித்து மகளீர் காவல் ஆய்வளர் தீவிர விசாரனை நடத்தினர்.
மாணவியின் எதிர்வீட்டில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் சேகரை பிடித்து விசாரனை செய்தனர். அப்போது தனது குற்றத்தை சேகர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதனால், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் உண்மையை உறுதி செய்த பின் சேகரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







