ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆரின் முதலும் கடைசியுமான திரைப்படம் ‘அன்பே வா’

1964ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவாஜியின் கர்ணன் திரைப்படம், பெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் எம்ஜிஆர் நடிப்பில் தயாரான அன்பே வா திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. ஆங்கிலத் திரைப்படத்தின்…

1964ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவாஜியின் கர்ணன் திரைப்படம், பெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் எம்ஜிஆர் நடிப்பில் தயாரான அன்பே வா திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவலான அன்பே வா குறித்து தற்போது பார்க்கலாம்….

ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆர் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் அன்பே வா. 1966ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தைத் திருநாளான பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது… ஹாலிவுட் திரைப்படமான Come September என்ற திரைப்படத்தை பார்த்த இயக்குநர் A.C. திருலோகசந்தர், அந்த படத்தின் மையக் கருத்தை மட்டும் தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி அன்பே வா திரைப்படத்தை இயக்கினார்.

ஏவிஎம் நிறுவன அதிபர், மெய்யப்ப செட்டியாரிடம் எம்.ஜி.ஆரை வைத்து படம் பண்ணலாம்னு இருக்கேன் எனக்கூற எம்.ஜி.ஆர் நமக்கு ஒத்துவருவாரா என செட்டியார் கேட்க… எம்ஜிஆரை சந்தித்து ஒப்புதல் பெற்றார் A.C. திருலோகசந்தர். இன்று கேட்டாலும் மனதை அள்ளும் பாடல்கள் அடங்கிய அன்பே வா திரைப்படம்., இளமை பொங்கும் காதல் கதைதான்.

 

தமிழ் திரையுலகுக்கு இத்தகைய கதை புதிதல்ல என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் அவரது ரசிகர்களுக்கும் புதிது. ஈஸ்ட்மென் கலர். சிம்லாவில் படப்பிடிப்பு, அபிநய சரஸ்வதி சரோஜாதேவி. நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் நடித்தனர். எம்ஜிஆர் நடிக்கும் திரைப்படத்தில் வழக்கமாக ஐந்தாறு வில்லனெல்லாம் இருந்த நிலையில், ஈகோதான் திரைப்படத்தின் வில்லன்.

காதலிப்பதை சொல்லாமல் சொல்லி, ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுதான் திரைக்கதையின் விளையாட்டு. குடியிருந்தகோயில்’ படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு எல்.விஜயலட்சுமியுடன், நான் ஆடினா நல்லாவே இருக்காது என மறுத்த எம்ஜிஆரிடம், இயக்குநர் கே.சங்கர் பேசி ஆட வைத்தார்.

சுமார் 50 வயதில் அன்பே வா படத்தில் இடம்பெற்ற ஹே…நாடோடி, நாடோடி … பாடலில் எம்ஜிஆரின் நடன வேகம், பாடல் தொடங்கி முடியும் வரை அசத்தலாக இருக்கும். மறைந்த பிரபல பின்னணி பாடகர் ஏ.எல். ராகவனும் எம்ஜிஆருடன் ஆடியிருப்பார் 1966ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான 9 படங்களில், அன்பே வா படம்தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அன்பான ரசிகர்களையும் வா வா என வரவேற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.