முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

ஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் குறையவில்லை என்றும் சில நாடுகளில் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு டெல்டா வகையைச் சேர்ந்த வைரஸே காரணம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே எனத் தெரிவித்துள்ள சௌமியா சுவாமிநாதன், பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது ஆமை வேகத்தில் நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே பயனளிப்பதாகவும், கொரோனா தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

Janani

கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு

Halley Karthik

’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’

Janani